தத்துவம்

கடவுளின் கதை 

1ம் பாகம்
ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை

பக்கங்கள் 360
விலை ரூ.250


"கடவுளின் கதை"யானது நம்பிக்கை, நம்பிக்கையின்மை எனும் இரண்டும் சேர்ந்தது. நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்கும் இடையிலே மோதல், அந்தக் கடவுள்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்லாது அறிவின் அடிப்படையிலும் நியாயம் வழங்க செய்யப்பட்ட முயற்சிகள். அவற்றில் எழுந்த முரண்கள், ஏகக் கடவுளை கொண்டு வரத்துடித்த தீவிரம். ஆனால் அதற்கு பல கடவுள்காரர்களே தெரிவித்த கடும் எதிர்ப்பு, அப்படிக் கொண்டுவரப்பார்த்தபோது கடவுளின் இருப்பு பற்றியே சந்தேகத்தை கிளப்பிய நாத்திகர்கள் என்று கடவுளின் கதையானது நெடியதாகிப்போனது... 

கடவுளின் கதை

பாகம் 2
பக்கங்கள் 440
விலை ரூ.300


பல கடவுள் வணக்கத்திலிருந்து ஏக கடவுள் வணக்கத்தை நோக்கி உலகம் பயணப்பட்டதில் விபரீதமான, வினோதமான முரண்கள் பிறந்தன. சித்தாந்த ரீதியாகக் கடவுள் ஒருவரே என்று ஏற்றுக் கொண்டவர்களும் பண்பாட்டு ரீதியாக அவர் தங்களது கடவுளே என்று வன்மையாக வாதிட்டார்கள். கர்த்தரா, அல்லாவா, புத்தரா, மகாவீரரா, சிவனா, விஷ்ணுவா அந்த ஏகக் கடவுள் என்பதில் தீராத மோதலும் பகைமையும் வெளிப்பட்டது. உலகம் ஒன்று என்றால் கடவுளும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும், கடவுள் ஒன்று என்றால் மதமும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். பிறகு ஏன் இத்தனை மதங்கள் எனும் கேள்விக்கான விடை இந்த நிலப்பிரபு யுகத்தில் கிடைக்கவேயில்லை.

கடவுளின் கதை

பாகம் 3
பக்கங்கள் 376
விலை ரூ.250


ஒவ்வொரு யுகப்புரட்சிக்கும் முன்னால் ஓர் இடைப்பட்ட காலம் இருந்திருக்கும். அது அறிவுசார் உலகில் துல்லியமாக வெளிப்பட்டது. முதலாளி யுகத்திற்கு முந்திய காலத்தில், 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகள் அத்தகையவை. "கடவுளின் கதை"யில் இதுவொரு முக்கியமான திருப்பம். கடவுள் சற்றே பின்வாங்கி இடம் கொடுக்க மனிதன் ஒரு புது வளர்நிலையை எட்டினான். நிலப்பிரபு யுகத்திலும் சிறந்த ஒரு யுகத்திற்குள் நுழைந்தான். அது மனிதகுல முயற்சியால் நடந்தது; அது மேலும் மனித முயற்சியை வேண்டி நின்றது. பளிச்சென்று சொன்னால் கடவுள் தனது அரசியல் அதிகாரத்தை இழக்கத் துவங்கியதே இந்த இடைக்காலத்தின் தனித்துவம். அதனாலேதான் மனிதனின் பொருளியல் அதிகாரம் ஒரு புதிய கட்டத்தை எட்டியது. 

கடவுளின் கதை 

4ம் பாகம்

288 பக்கங்கள்
விலை ரூ.200



முதலாளி யுகம் ஒரு பாகத்தில் முடிந்து விடுமென்று நினைத்தேன். அதன் முதல் நூற்றாண்டே தனி பாகமாக ஆகிவிட்டது. எனவே, அதன் இரண்டாம் நூற்றாண்டு ஐந்தாம் பாகமாக வெளிவந்து “கடவுளின் கதை” முடியும்.
மீண்டும் வலைத்தளங்களுக்கே நன்றி சொல்ல வேண்டியுள்ளது. ஹெகல், ஸ்டிராஸ், பாயர்பாக், டார்வின் போன்ற ஐரோப்பிய ஞானிகளின் மூலநூல்கள் அங்கே கிடைத்தன. இளமையிலிருந்தே மார்க்சிய நூல்களை வாசித்து வந்த நான் பாயர்பாக்கின் “கிறிஸ்தவத்தின் சாரம்” பற்றிக் கேள்விப்பட்டிருந்தேனே தவிர அதைப் பார்த்ததில்லை. இப்போது அதைப் படித்தபிறகுதான் மார்க்ஸ்-எங்கெல்சின் படைப்புகள் மேலும் விளக்கம் பெற்றன.
இன்னும் ஆச்சரியம், இந்தியாவின் சில பழைய நூல்களும் வலைத்தளங்களில் கிடைத்தது. ராம்மோகன் ராயின் ஆங்கில நூல்கள், சிவநாத் சாஸ்திரி எழுதிய “பிரம்மோ சமாஜ வரலாறு”, மகேந்திரநாத் குப்தா எழுதிய “ராமகிருஷ்ணரின் கதாமிர்தம்”, தயானந்த சரஸ்வதி எழுதிய “சத்யார்த்த பிரகாசம்” போன்றவற்றைப் படித்த பிறகுதான் அந்தப் பகுதிகளைப் பற்றி எழுதும் தைரியம் வந்தது.
இஸ்லாமிய, பவுத்த வரலாறைப் பொறுத்தவரை நண்பர் சீனிவாசராகவனுக்குத்தான் மீண்டும் நன்றி சொல்ல வேண்டும். “இஸ்லாம் பற்றிய கேம்பிரிட்ஜ் வரலாறு” போன்ற முக்கியமான நூல்களை அவர்தான் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நூலகத்திலிருந்து படியெடுத்து அனுப்பி வைத்தார். திராவிடர் கழகத்திற்கும் நன்றி செலுத்த வேண்டும். அது அந்த நாளில் வெளியிட்டிருந்த இங்கர்சாலின் படைப்புகள் அவரைப் பற்றி எழுத அஸ்திவாரம் போட்டுத் தந்தன.

-------------------------------

கடவுளின் கதை 5ம் பாகம்

400 பக்கங்கள்

விலை ரூ.250


உலக ஞானிகள் பலரும் கடவுளைப் பற்றிப் பேசவே செய்திருக்கிறார்கள். அந்தக் கற்பிதம் பற்றி இந்த நிஜமானவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை அறிய சுவையாகவே இருந்தது. 

கடவுளை தரிசிக்கிற சாக்கில் இந்த ஞானிகளை தரிசிக்கிற “புண்ணியம்” கிட்டியது. நிச்சயமான ஒன்றைப் பற்றி இத்தனை நூற்றாண்டுகளாக இத்தனைப் பேச்சுக்கள் தேவையில்லை. இப்படி விடாது பேசப்பட்டதாலேயே கடவுளின் இருப்பு நிச்சயமற்றது என்பது நிச்சயமாகிறது. மிஞ்சிய கேள்வி என்னவென்றால் இன்னும் எவ்வளவு காலம் இந்தப் பேச்சு அடிபடப்போகிறது என்பதுதான். அதுபற்றிய எனது கணிப்பே நூலின் கடைசி அத்தியாயம். 

மனிதகுலம் நடந்து வந்த பாதையை எத்தனை முறை திரும்பிப் பார்த்தாலும் அலுக்கப்போவதில்லை. மகாக் கலைஞர்களின் கற்பனைகளைவிட மனிதகுல வரலாறு பெரும் அதிசயங்களைக் கொண்டது. அதிலொன்றுதான் கடவுள். இன்னும் பல அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. 

யுக மாறுதலானது ஒற்றைக் காரணியைக் கொண்டதா, ஒன்றுக்கு மேற்பட்டதைக் கொண்டதா, பல காரணிகளில் ஒன்றுதான் அஸ்திவாரத்தைப் புரட்டிப் போடுகிறதா, அப்படியெனில் இதர காரணிகளின் பங்களிப்பு என்ன, ஒரு யுக மாறுதலில் நடந்தது போலவே அடுத்த யுக மாறுதலும் வெறும் கூறியது கூறலா அல்லது அதற்கென்று சில சிறப்புக் கூறுகள் உண்டா, உண்டு என்றால் அவை என்ன, முந்திய யுக மாறுதல்களின் அதே கணக்கின்படிதான் தற்போதைய யுகம் நடப்புக்கு வந்ததா அல்லது இதற்கென்று தனித்த அம்சங்கள் உண்டா, அனைத்திற்கும் மேலே தற்போதைய யுகம் எப்போது முடிவுக்கு வரும், அது எப்படி வரும், அதற்கான உந்து சக்திகள் என்னவாக இருக்கும்? 

படியுங்கள் அனைத்தும் விளங்கும்





யுகங்களின் தத்துவம்

பக்கங்கள் 272விலை ரூ.170


சோவியத் ஒன்றியத்தின் சிதைவைத் தொடர்ந்து முதலாளியுகமே இறுதியானது,அதுவே நித்தியமானது என்று முதலாளித்துவ அறிவுஜீவிகள் உற்சாகமாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். மனிதகுல வரலாறு அப்படியெல்லாம் அந்தரத்தில் நின்றுவிடாது. அபத்தமாக முடிந்து விடாது. அடுத்தடுத்த யுகங்களைக் கண்ட உலகு மற்றொரு புதுயுகத்தையும் காணத்தான் போகிறது. அந்த மகத்தான யுகப்புரட்சி எப்படி நடக்கும், எப்போது நடக்கும் என்பதை முந்திய புரட்சிகள் எப்படி நடந்தன, எப்போது நடந்தன என்பதைக் கொண்டு முன்னுணர முடியும். இன்றின் நீட்சியே நாளை என்பதால் தற்போதைய யுகத்தின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு பிறக்கப்போகிற புது யுகத்தின் அடிப்படை குணத்தையும் ஊகிக்க முடியும். மார்க்சியம் எழுதியதல்ல வரலாறு, அந்த வரலாறு எழுதியதே மார்க்சியம் என்பதை எடுத்துக்காட்டி வரலாற்றியலுக்கு புது வலு சேர்க்கிறது இந்தப்படைப்பு. 



தமிழரின் தத்துவ மரபு
பாகம் 1
பக்கங்கள் 272
விலைரூ.170



தமிழகத்தில் எந்த ஒரு மார்க்சியவாதியோ அல்லது மார்க்சியவாதி அல்லாதவரோ இதுவரை படைத்திராத ஒரு தத்துவக் கலைக்களஞ்சியத்தைப் படைத்துள்ள அருணன் வந்து சேரும் முடிவு முற்றிலும் ஏற்கத்தக்கது. "தத்துவத்தை வர்ணாசிரம ஆதரவு தத்துவம், வர்ணாசிரம எதிர்ப்புத் தத்துவம் என்று பிரித்து வைத்துக் கொள்வது இன்றைய சமுதாயத்தை முன்னெடுத்துச் செல்ல அறிவுலகில் பெரிதும் உதவும்."
இந்தியா டுடே& ஏட்டில் பிரபல ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை



தமிழரின் தத்துவ மரபு

பாகம் 2- சைவ சித்தாந்தம் முதல் நவீன குருமார்கள் வரை



பக்கங்கள் 304
விலை ரூ.180
உலகாயதம், சாங்கியம், நியாயம், வைசேடிகம், மீமாம்சம், வேதாந்த உபநிடத மரபு, சமணம், பௌத்தம், ஆசீவகம் போன்ற வட இந்தியாவிலிருந்து வந்த தத்துவங்கள் முதல் வெளிநாடுகளிலிருந்து வந்த கிறிஸ்தவம், இஸ்லாம், மார்க்சியம் போன்ற தத்துவங்கள் வரை எதிர்கொண்டு தரிசித்து, உள்வாங்கியதிலும் வெளிப்படுத்தியதிலும் கிளை பரப்பியதிலும் தமிழர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை தமிழிலக்கியத்திலும் பல்வேறு வகைத் தத்துவ மரபுகளிலும் தனக்குள்ள ஆழமான புலமையின் வழியாக நமக்குக் கற்றுத்தரும் பணியை மேற்கொண்டிருக்கிறார் நூலாசிரியர்.
இந்தியா டுடே& ஏட்டில் பிரபல ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை




வாழும்கலை

ஓஷோவை முன்வைத்து விவாதம்
பக்கங்கள் 216
விலை ரூ.70

புத்தரின் சிந்தனைகளுக்கும் ஓஷோவின் சிந்தனைகளுக்கும் இடையே உள்ள சம்பந்தாசம்பந்தமின்மை பற்றி அலசிக் கொண்டே சரியான வாழும் கலையை அடையாளம் காண முயலுகிறது இந்த நூல்.



விசாரணைகள்
உரையாடல் மூலம் முக்காலமும் அறிதல்
பக்கங்கள் 288
விலை ரூ.180

காலம் பற்றிய ஆய்வில் இறங்கிய அந்த மூன்று நண்பர்களும் கடந்த காலம் கொண்டு நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளவும், நிகழ்காலம் கொண்டு எதிர்காலத்தை முன்னுணரவும் முனைந்தார்கள். அது லோக விசாரணை, தேச விசாரணை, உள்ளூர் விசாரணை என்று மூன்று வெளிகள் பற்றிய அலசலாகவும் வந்து நின்றது.





தத்துவஞானம்

பக்கங்கள் 142விலை ரூ.50



இது தத்துவம் என்று தெரியாமலே நம்மில் பலரும் தத்துவம் பேசுகிறோம். இது தத்துவம் என்று தெரிந்து பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! தத்துவம், பிரபஞ்சம், இயக்கம், வளர்ச்சி, உணர்வு, விதிகள், கடவுள், மனிதன், ஞானம், களம் எனும் பத்து வார்த்தைகளுக்கு விளக்கம் தருவதன் மூலம்  தத்துவ தரிசனம் இங்கே மலரின் மடலாய் விரிகிறது. இது தரும் மணம் மார்க்சியமாக இருந்தால் அதற்கு பொறுப்பு நூலாசிரியர் என்பதைவிட மார்க்சியத்தின் தத்துவ பலமே.

Comments