வரலாறு

எம்.ஜிஆர்.

நடிகர் முதல்வரான வரலாறு

பக்கங்கள் : 240

விலை ரூ.150


எம்.ஜி.ஆர். ஆட்சியில் அவரின் விழிகளாகவும் செவிகளாகவும் இருந்தவர் போலீஸ் அதிகாரி கே.மோகன்தாஸ். எம்.ஜி-ஆர். பற்றி அவர் எழுதிய நூல் பற்றிய விபரம் கணினி வலையில் கிடைத்தது. நூல் கிடைக்காமலிருந்தது. பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அந்த நூல் கிடைத்தது. 

"நான் ஏன் பிறந்தேன்" எனும் எம்ஜிஆரின் சுயசரிதை 1972 டோடு முடிந்து போனது. அதுவும் காலவரிசைப்படி சுயசரிதைக்கு உரிய ஒழுங்குபடி எழுதப்பட்டது அல்ல. மேலும் கீழுமாய் எங்கெங்கோ போய்வரும். அதிலிருந்து அவரது வாழ்க்கை கதையை உருவி எடுக்க வேண்டியிருந்தது. அப்படியும் பல இடைவெளிகள் இருந்தன.

இங்கே எஸ்.விஜயன் தொகுத்திருந்த எம்.ஜி.ஆர். கதை பெரிதும் உதவியது. இது எம்.ஜி.ஆர். பற்றிய அவரின் சமகாலத்தவரின் தொகுப்பு. 1972&1977 எனும் அந்த ஐந்து ஆண்டுகளே அரசியல் நோக்கில் முக்கியத்துவம் பெற்றவை. இதனை தீக்கதிர் ஏடுகளில் வந்த கட்டுரைகளை உதவிக்கு எடுத்துக் கொண்டேன்.

ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த ஓர் அதிசயத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம். எனினும் இதற்கு முன்னோடியாகிய "அண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு" என்கிற நூலையும் படித்தால் தற்கால தமிழக அரசியல் வரலாறு பிடிபட்டுப்போகும். 


-----------------------------------

லெனின்

வாழ்வும் சிந்தனையும்

பக்கங்கள்: 536

விலை: ரூ.200

முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் வேறு சிலரும் லெனினின் வாழ்வை சித்தரிக்கத்தான் செய்திருக்கிறார்கள்..

நான் செய்திருப்பது என்னவென்றால் 33 பாகங்களாக உள்ள அவரின் எழுத்துக்கள் பலவற்றையும் படித்து பயன்படுத்தியிருப்பது, முக்கியமான அனைத்து நூல்களையும் அறிமுகப்படுத்தியிருப்பது. அதே சமயத்தில், அவரின் வீரஞ்செறிந்த வாழ்வின் சுவை குன்றாமல் பல நிகழ்வுகளையும் அப்படியே விவரித்திருப்பது. 

இதற்கு அவரைப் பற்றிய சமகாலத்தவரின் நினைவுகள் பெரிதும் பயன்பட்டன. சமுதாயச் சிற்பியை எழுத்துலுகச் சிற்பியாகவும் ஒருங்கே சித்தரித்ததால் நூல் பெரிதாகிப் போனது. 

மார்க்சியம் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் இன்றைய காலத்தில், லெனின் உருவாக்கிய சோவியத் ஒன்றியம் சிதைந்து போயிருக்கும் இந்தச் சூழலில் அவரைப் பற்றி மட்டுமல்லாது, அவரது சிந்தனைகளையும் அறிவது ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டின், ஒவ்வொரு இடதுசாரியின் கடமையாகும். 

இளைஞர்கள் மத்தியில் பேசியபோது அவர்களின் பணியை "கற்க" எனும் ஒற்றைச் சொல்லில் சுருக்கிச் சொன்னார் லெனின். 

சித்தாந்தத்தைப் பொறுத்தவரை நாம் எல்லோருமே இளைஞர்கள்தாம். அனைவருக்குமானது அந்த மந்திரச் சொல்.

- கற்க







அண்ணா 

ஆட்சியைப்பிடித்த வரலாறு
பக்கங்கள். 320
விலை ரூ.170



பெரியார்&மணியமமை திருமணமா திமுக பிறப்புக்குக் காரணம்? தமிழக வரலாற்றின் ஒரு புதிர் அவிழ்கிறது. திமுக பிறந்து பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது. இந்த சாதனையின் ரகசியம் கட்டுடைக்கப்படுகிறது. அண்ணாவின் வாழ்வு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஓர் அரிய பொக்கிஷம்.



தம்மமும் சங்கமும்

பக்கங்கள் 144
விலை ரூ.50


புத்தரைப்போல எதிரிகள், சீடர்கள் இருசாரராலும் ஒருங்கே பிரித்துக் கூறப்படுகிறவர் வேறு யாரும் இல்லை. வேத மதத்தை எதிர்த்துப் புறப்பட்டவரை ஒரு வேதவாதி என்று சித்தரிக்கிறார்கள். கட«வுளே இல்லை என்றவரை ஒரு கடவுளாக்கி வழிபடுகிறார்கள். புத்தர் எனும் சந்திரனை மறைக்கும் கருமேகங்களை விலக்கி அவரின் மெய்யான முகத்தைக் காட்டுகிறது இந்த நூல். புத்தருக்கு முன் & புத்தர் & புத்தருக்குப்பின் & என்று முக்காலத்திலும் இது பயணிக்கிறது.



கார்ல் மார்க்ஸ்

வாழ்வும் சிந்தனையும்
பக்கங்கள் 400
விலை ரூ.175



தனிவாழ்வு, பொதுவாழ்வு, ஞானவாழ்வு எனும் முப்பரிமாணங்கள். டாக்டர் பட்ட ஆய்வேடு முதல் அனைத்து படைப்புகளும் அறிமுகம். தனிமனித வரலாறு மட்டுமல்ல 19ம் நூற்றாண்டு ஐரோப்பிய அறிவுலக வரலாறு.

Comments