நாவல்கள்

“கடம்பவனம்”


சரித்திர நாவல்களுக்கு தமிழில் எப்போதும் கிராக்கி உண்டு. ஆனால் எத்தனை நாவல்களில் சரித்திரத்தின் மெய்யான உயிரோசையைக் கேட்க முடிந்தது? நாயகர்களின் சாகசச் செயல்களின் முரட்டுச் சத்தமே பலவற்றில் மேலோங்கி நின்றது. “வரலாறானது மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறே” எனும் கார்லைலின் தவறான சித்தாந்தமே படைப்பாக்கமாக உருவெடுத்து நின்றது. ஒட்டுமொத்த சமூகத்தின் இயல்பான உணர்வை வெளிப்படுத்திய நாவல்கள் மிகக் குறைவே. “கடம்பவனம்” அத்தகைய படைப்புகளில் ஒன்று என்று நினைக்கிறேன்.
பாரதி சொன்னது போல ஓரளவு படிப்பு வாசனை உள்ள தமிழ் வாசகர்களை மனதில் கொண்டே இந்த நாவலின் கட்டமைப்பும், பாணியும் உருவாக்கப்பட்டது. எனினும் அந்தப் பரந்த வாசகர்களிடம் இந்தப் படைப்பு இன்னும் சென்றடையவில்லை என்றால் அதன் காரணம் அன்று மண்டிக் கிடந்த மடிசஞ்சித்தனத்தை தயக்கமின்றி இது அம்பலப்படுத்தியது. பூக்கடைக்கும் விளம்பரம் தேவைப்படுகிற காலமிது. விளம்பரதாரர்களோ மடிசஞ்சிகள். அவர்கள் எப்படி இந்த நாவலை பிரபலப்படுத்துவார்கள்?



பூரு வம்சம்

மகாபாரதத்தின் மறுவாசிப்பு



தலைவன், தலைவியைச் சுற்றி வருவதே காவிய மாகக் கருதப்படுவதுண்டு. இராமாயணம் பெரும் பாலும் அந்தப் படியாகவே உள்ளது. மகாபாரதம் அப் படியல்ல. இங்கே கதையே கதாநாயகன். நிறைய கதாபாத் திரங்கள். கதைப் போக்கில் அனேகமாக அனைத்திற்கும் வலுவான இயங்கு நிலைகள், குறிப்பாக பெண் கதா பாத்திரங்கள் தீவிரமாகத் தலையீடு செய்கின்றன. இராமாயண நாயகன் இராமன் என்பது போல இங்கே அர்ச்சுனனைச் சொல்ல முடியாது. ஆனால் சீதை போல் பாஞ்சாலியைச் சொல்லலாம். அவள் அளவுக்கு இல்லை யென்றாலும் இன்னும் பல பெண்மணிகளும் தங்களை நிலைநிறுத்தப் போராடுகிறார்கள். அதிலே அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை விடப் போராடியிருக்கிறார்கள் என்பதே எனக்கு அதி முக்கியமாகப்பட்டது. தாய்வழிச் சமுதாயம் உதிர்ந்து கொண்டேயிருக்க, தந்தைவழிச் சமுதாயம் மேலும் மேலும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்க இது தனி மனிதர்களின் வாழ்வில் விதவிதமான விளையாட்டு களை நடத்தியிருக்கும். வேதனை இரு பாலருக்குமே என் றாலும் பெண்ணே தன்னை இழந்தாள், தன் சுயத்தை இழந்தாள்.
இதிகாசங்களையும் புராணங்களையும் காலம் சேகரித்து விட்டுப் போன குப்பைகள் என்று கருதுகிற வர்களும் சரி, அவற்றைப் புனித நூல்களாக ஏற்று பூஜிப்பவர்களும் சரி முன்னோர்களின் உண்மையான வாரிசுகள் அல்ல.  பிதுரார்ஜித சொத்தை முதல் வகை யினர் அவர்களாகவே கைவிட்டு நட்டமடைகிறார்கள். இரண்டாம் வகையினரோ வாங்கிக் கொண்டாலும் நடைமுறையில் பயன்படுத்தாமல் நட்டமடைகிறார்கள். மறுவாசிப்பின் மூலம் அவற்றின் ஊடே புகுந்து கடந்த காலத்தைத் தரிசிப்பவரே எதிர்காலத்திற்கான பாதை யைச் செப்பமிட்டுக் கொள்ள முடியும். இந்தச் செய் முறையில் இடைப்பட்ட கால வாழ்வு பயனுள்ளதாய் மாறிப் போகிறது. அதிலேயொரு பங்களிப்பே “பூருவம்சம்''.
பரத வம்சம் என்றே பெருமையோடு சொல்கிறார் கள். எனக்கென்னவோ பூருவே பிடித்துப் போனான். பரதன் வீரத்தின் அடையாளமாயிருக்க, பூரு தியாகத் தின் -அதிலும் ஞானவழிப்பட்ட தியாகத்தின் -நல்ல இடுகுறியாகத் தெரிகிறான். உள்ளே புகுந்தால்  உங்களுக்கும் தோன்றக் கூடும்.


Comments