சமூக ஆய்வு நூல்கள்

காலந்தோறும் பிராமணியம்

பாகம் 1

வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
பக்கங்கள் 384
விலை ரூ.250



(அழையுங்கள் இல்லம் தேடி நூல் வரும்... வெளியீட்டுச் செலவை வசந்தம் வெளியீட்டகமே ஏற்கும்)
சமணம், பவுத்தம் வீழ்ச்சியடைந்ததற்கு பிராமணியத்தின் கடும் தாக்குதலே பிரதான காரணம் என்றாலும் இந்த மதங்களின் உள்ள பலவீனங்களும் ஒரு காரணமாகும். ஈவற்றை எனது "நிழல்தரா மரம்" நாவலில் ஏற்கெனவே கதைப்போக்கில் சொல்லியிருந்தேன். அவற்றை ஆதாரத்தோடு இப்போது இங்கேயும் சேர்த்திருக்கிறேன். அந்த ஆதாரம் சமண நூலாகிய "நீலகேசி". அதிலே நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த பலவீனங்கள் வருகின்றன...



காலந்தோறும் பிராமணியம்


2 மற்றும் 3ம் பாகங்கள்

சுல்தான்கள் காலம் & முகலாயர்கள் காலம்பக்கங்கள் 588விலை ரூ.350




அரசியல் - பொருளாதார பின்புலத்தில் பிராமணியம் முன்னிறுத்தப்படுகிறது. அதை சுல்தான்களும் முகலாயர்களும் எதிர்கொண்ட விதம் கூறப்படுகிறது. சாஸ்திர ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் அதன் இயங்குநிலை விளக்கப்படுகிறது. மிகுந்தஇக்கட்டான காலத்தையும் பிராமணியம் சமாளித்த ரகசியம் விண்டுரைக்கப்படுகிறது. பக்தி இயக்கத்தை மெய்யானது என்றும், பிராமணியத்தின் புது வடிவங்கள் என்றும் பகுத்துப் பார்த்திருப்பது இந்நூலின் சிறப்பு.






காலந்தோறும் பிராமணியம்

கிழக்கிந்திய கம்பெனி காலம்

பாகம் 4
பக்கங்கள் 264
விலை ரூ.150


இந்தியாவின் மெய்யான சமூக வரலாறு இது. சாதியம் மற்றும் ஆணாதிக்கத்தின் தோற்றம் - தொடர்ச்சி பற்றிய எத்தனையோ வினாக்களுக்கு விடை கிடைக்கும். தூக்கி நிறுத்தப்பட்ட பொய்மை பிம்பங்களும் இட்டுக்கட்டப்பட்ட மதிப்பீடுகளும் இற்றுவிழும் சத்தத்தைக் கேட்கலாம். கூடவே, மெய்யான சரித்திர நாயகர்களையும் சந்திக்கலாம். நன்கு துடைக்கப்பட்ட இந்த காலக்கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது கடந்து போனவை மட்டுமல்லாது நடந்து கொண்டிருப்பவையும் கூடுதல் குறைச்சல் இல்லாமல் உங்களுக்குத் தெரியும். 




காலந்தோறும் பிராமணியம்

நேரு காலம்
பாகம் 6
பக்கங்கள் 396
விலை ரூ.250


இந்த ஆறாம் பாகம் தற்கால இந்தியாவாக & ஒரே பகுதியாக  அமையும் என்று நினைத்திருந்தேன். எழுதப் புகுந்தால் நேரு காலமே ஆறாம் பாகமாகி விட்டது. அவ்வளவு முக்கிய காலமாகவும், அவ்வளவு விஷயங்கள் கிடைத்த காலமாகவும் இருந்தது. சிப்பாய் புரட்சியில் நேருவின் கருத்து என்ன? நிலப்பிரபுத்துவத்தின் சமூக சாரமே பிராமணியம் என்கிறேனே அது ஏன்? ஜான்சிராணி, நானாசாஹிப், தாத்தியாதோப் போன்றோரை பார்ப்பணியம் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? ஆகியவை இந்நூலில் அலசி ஆராயப்பட்டுள்ளன.




காலந்தோறும் பிராமணியம் 

பாகம் 7
இந்திரா காலம்
பக்கங்கள் 416
விலை ரூ.250



இந்தியாவின் மெய்யான சமூக வரலாறு, சாதியம் மற்றும் ஆணாதிக்கத்தின் தோற்றம் & தொடர்ச்சி பற்றிய எத்தனையோ வினாக்களுக்கு விடை கிடைக்கும். தூக்கி நிறுத்தப்பட்ட பொய்மை பிம்பங்களும், இட்டுக்கட்டப்பட்ட மதிப்பீடுகளும் இற்றுவிழும் சத்தத்தைக் கேட்கலாம். கூடவே, மெய்யான சரித்திர நாயகர்களையும் சந்திக்கலாம். நன்கு துடைக்கப்பட்ட இந்தக் காலக்கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது கடந்துபோனவை மட்டுமல்லாது நடந்து கொண்டிருப்பவையும் கூடுதல் குறைச்சல் இல்லாமல் தெரியும். 



காலந்தோறும் பிராமணியம்

பாகம்- 8

640 பக்கங்கள்
விலை ரூ.400



அரசியல் பின்புலம், பொருளியல் பின்புலம், பிராமணியத்தை ராஜீவ் எதிர்கொண்ட விதம், பிராமணியத்தை வி.பி.சிங் அரசு எதிர்கொண்ட விதம், பிராமணியத்தை நரசிம்மராவ் எதிர்கொண்ட விதம், பிராமணியத்தின் இயங்குநிலை அரசயலில், பாஜக, சிவசேனை, ஆர்.எஸ்.எஸ்.குருமார்கள், ஊடகங்கள், சமூக சீர்திருத்தம் & மாதர் விடுதலை, முஸ்லிம்களின் உரிமை, இந்தி பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டோரின் எழுச்சி, உ.பியில் தலித்துக்களின் எழுச்சி, திராவிட இயக்கம், திமுக, அதிமுக, மதிமுக, தமிழகத்தில் புதிய சக்திகள், சிபிஐ கட்சி, சிபிஎம் கட்சி உள்ளிட்டவற்றின் வரலாறுகள் அனைத்தும் தொகுக்கப்பட்ட நூல். 

பெரியாரின் பெண்ணியம்

பக்கங்கள் 144

விலை ரூ.60


பெரியாருக்குள் பெண்ணியச் சிந்தனை பிறந்த கதை. பிறப்பின் ஊடே தமிழகத்தின் மாதர்குல வரலாறே வெளிப்படுகிறது. பெண்ணின் உரிமைகளுக்காகத் துணிவோடு குரல் கொடுத்த மெய்யான ஆண்மகன். எனினும், இவரின் சிந்தனை விவாதத்திற்கு அப்பாற்பட்டதல்ல..



சங்கரமடத்தின் உண்மை வரலாறு

பக்கங்கள் 112

விலை ரூ.50


ஆதிசங்கரர் நிறுவியதா காஞ்சிமடம்? 

பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திரர் ஆலயப் பிரவேச இயக்கத்தை ஆதரித்தாரா? எதிர்த்தாரா?

ஒரே சமயத்தில் மூன்று சங்கராச்சாரியார்கள் எப்படி?

ஜயேந்திரர் மடத்திலிருந்து காணாமல் போனது ஏன்?

அவரின் வாக்கு "தெய்வ வாக்கா?" வருணாசிரம வாக்கா?

காஞ்சி நிகர்நிலை பல்கலை.யில் நடந்தது என்ன?

கொலை வழக்கில் ஜயேந்திரர் கைதானது எப்படி?

பதில்கள் உள்ளே... 




கோட்சேயின் குருமார்கள்

காந்திஜி படுகொலை திடுக்கிடும் உண்மைகள்

72 பக்கங்கள்

விலை ரூ.40



கோட்சே தனிமரமல்ல...
கூட்டம் இருந்தது
கொள்கை இருந்தது
தலைவர்கள் இருந்தார்கள்.
மறைக்கப்பட்ட சரித்திரம்
வெளிச்சத்திற்கு வருகிறது...



மண்ணுக்கேற்ற மார்க்சியம்

752 பக்கங்கள்

விலை ரூ.400


21ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தை அறிய இந்தத் தொகுப்பு உதவும். அந்த வகையில் இது ஒரு சமகால அறிவுசார் வரலாறு.
மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை இரண்டு விதமாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒன்று, மார்க்சியத்தின் அடிப்படைக்கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்திய மண்ணுக்கும் பொருந்தக் கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால், அவற்றுக்கேற்ப மார்க்சியத்தை பிரயோகிக்க வேண்டும். அவ்வப்போது எழுந்த பிரச்சனைகள் & கேள்விகள் & தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு இந்த இரு கோணங்களிலிருந்து பதில் சொல்ல முயன்றிருக்கிறேன். 


Comments

  1. தோழர் நான் காஞ்சி மக்கள் மன்றதிலிருந்து எழுதுகிறேன், உங்களுடைய முகநூல் பதிவுகளையும், வலைப்பூவில் உங்களுடைய கருத்துகளையும் தொடர்ந்து வாசித்தும் அது சார்ந்து எங்களுக்குள் விவாதித்தும் வருகிறோம். காலந்தோறும் பிராமணியம் என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய நூல்கள் பிராமணியத்தை தோலுரித்துக் காட்டியுள்ளதாக மற்ற அமைப்பு தோழர்கள் மூலம் அறியப் பெற்றோம். அந்த எட்டு பாகங்கள் அடங்கிய காலந்தோறும் பிராமணியம் என்ற நூலை எங்களுடைய செங்கொடி நூலகத்தில் வைத்து அமைப்புத் தோழர்கள் அனைவரும் அதை படிக்க வேண்டுமென நினைக்கிறோம். அந்த எட்டு பாகங்கள் அடங்கிய நூலை எவ்வாறு பெறுவது என்ற விவரத்தை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி தோழர்

    ReplyDelete

Post a Comment