இலக்கியம்

கண்ணதாசன்


184 பக்கங்கள்
விலை ரூ.100




கண்ணதாசன் என்றால் இப்போதும் தனிக்கவர்ச்சிதான். அவரது திரைப்பாடல்களை ரசித்து அசைபோடுவோர் ஏராளம். கூடவே அவரது "அர்த்தமுள்ள இந்துமதம்" போன்ற நூல்களுக்கு இப்போதும் கிராக்கிதான்.
"அர்த்தமுள்ளதா? அர்த்தமற்றதா?" எனும் அத்தியாயம் முக்கியமானது. கண்ணதாசனிடம் சமுதாயம் ஏற்கத்தக்கது எது, ஏற்கத்தகாதது எனது என்று விவாதிக்கப்பட்டுள்ளது. வெறுமனே பாராட்டுரையோ அல்லது தூற்றுதலோ இந்த நூலில் இல்லை. நியாயமான மதிப்பீட்டிற்கான முயற்சியே இது.
அவரின் நாவல்கள் இங்கே கணக்கில் கொள்ளப்படவில்லை. அதனால் மோசம் ஏதுமில்லை என்று பட்டது. இலக்கிய நோக்கிலோ, வாசகர் ஈர்ப்பு நோக்கிலோ அவை அவ்வளவு முக்கியமானவை அல்ல. முதல் பதிப்பிற்கு வைத்த பெயர் போல " கண்ணதாசன் கவிதைகளில் வண்ணக்கோலங்கள்" காணுவதே. வசதி கருதி தற்போது "கண்ணதாசன்" என்று சூட்டப்பட்டுள்ளது.





தமிழ் இலக்கிய (வழி) வரலாறு

பக்கங்கள் 348
விலை ரூ.130


இலக்கியங்களை வரலாற்றுப் பின்புலத்திலும், வரலாற்றை இலக்கியங்களின் வழியாகவும் காணுகிற புது முயற்சி.
இது தமிழ் இலக்கிய வரலாறு, இதுவே இலக்கிய வழி தமிழக வரலாறும்கூட.



மானுடம் தந்த கம்பன்

பக்கங்கள் 104
விலை ரூ.40


இராமன பெயரால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழலில் கம்பராமாயணம் புது அர்த்தம் பெறுகிறது.
இந்துத்துவவாதிகளுக்கு எதிராக கம்பன் நிற்கிறான். அவனது மனிதநேய சிந்தனை, மத நல்லிணக்க நோக்கு எடுத்துரைக்கப்படுகிறது.
மார்க்சியக் கண்ணோட்டத்தில் கம்பனை நிர்ணயிக்கும் முயற்சியும் உண்டு.



மார்க்சிய அழகியல்

பக்கங்கள் 160
விலை ரூ.60


கலை-இலக்கியம் பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ ஆகியோரின் சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன தமிழ் இலக்கியப் பின்புலத்தில்...
அழகியல் துறைக்கு மார்க்சியத்தின் பங்களிப்பும் அதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்படுகின்றன.
மார்க்சிய மூலவர்களின் இலக்கிய ரசனையையும் தரிசிக்கலாம்.


முப்பெருங் கவிஞர்கள்

பக்கங்கள் 240
விலை ரூ.120


பாரதி, பாரதிதாசன், பட்டுகோட்டை எனும் மூன்று பெருங்கவிஞர்களை முழுசாக மதிப்பிடுவது.
இந்த மூவருக்கும் இடையில் உள்ள சித்தாந்தத் தொடர்ச்சியை சொல்வது. அழகியலை எடுத்துரைப்பது.
இவர்களைப் பற்றிய தவறான விமர்சனங்களுக்கு சரியான பதிலுரை.

Comments